Top News

சஜித் அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் வெளிநடப்பு


ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் பாராளுமன்ற அமர்வில் இருந்து வௌிநடப்பு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்தில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டிருந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இதனால் இன்றைய அமர்வின் போது பிரேமலால் ஜயசேகரவின் பதவி பிரமாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கருப்பு பட்டி அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post