கடந்த தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் மிகப்பெறுமதியாக அமைந்திருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
எனவே அவர்களின் அபிலாசைகளை தான் நன்றாக அறிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரசுக்கு வாக்களித்த சாய்ந்தமருது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் பிரதம மரைக்காயர் வை.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன் போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த பொதுத் தேர்தலில் எனது வெற்றிக்கு சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் மிகப்பெறுமதியாக அமைந்திருந்தன.
நான் சாய்ந்தமருது மக்களின் தேவைகளை நன்கறிவேன். எனவே எனது நன்றி நவிழலை சாய்ந்தமருதிலிருந்தே ஆரம்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment