Top News

ஞானசாரருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்வதிலிருந்து - நீதியரசர் நவாஸ் விலகல்


நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக,தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரிப்பதிலிருந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் இன்று (16) விலகியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜாவால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளர் நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் உயிரிழந்த முல்லைத்தீவு குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்ய, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறிய குற்றச்சாட்டு, ஞானசாரர் மீது சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post