சுமனரத்ன தேரரை கட்டுப்படுத்தாதது ஏன்: சாணக்கியன் கேள்வி.

ADMIN
0

அரச ஊழியர்களை சிறைப்படுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை அரசு கட்டுப்படுத்தத் தவறுவது ஏன்? என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.

மத குரு என்ற அடிப்படையில் அதற்கேற்ப கௌரவமான முறையின் நடந்து கொண்டால் அவரை அனைவரும் மதிப்பார்கள், ஆயினும் குறித்த நபரின் நடவடிக்கைகள் மற்றும் நடத்தைகள் பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் பாரிய அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது என இன்றைய தனது நாடாளுமன்ற உரையில் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இவ்வாறு அரசு ஊழியர்களை அடைத்து வைத்து அடாவடியில் ஈடுபட்ட சுமனரத்ன தேரர் மீது எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top