முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2016இல் கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து குறித்த விசாரணைகள் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்கவேண்டாம் என குடிவரவு திணைக்கள ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, சம்பிக்க ரணவக்கவின் வாகனச் சாரதி துசித குமாரவை கைசெய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 இல் கொழும்பு இராஜகிரியவில் விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து சம்பிக்க ரணவக்க அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றார் என்றும், பின்னர் அவ்வேளை வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸில்; ஆஜராக்கினார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment