Top News

அதிரடியாக அதிகரிக்கும் தேங்காய்களின் விலை.


தற்போது தேங்காயின் விலை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதமளவில்

தேங்காய் ஒன்றின் விலையானது 100 ரூபா வரையில் அதிகரிக்கும் என தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது தேங்காய் ஒன்றின் விலையானது 70 முதல் 85 வரை காணப்படுகிறது.

மாதமொன்றிற்கு 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் சுமார் 150 மில்லியன் வரை நுகர்வோரின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தெங்கு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post