குவைத்தில் கொடூரம் இலங்கை பணிப்பெண், சித்திரவதை செய்யப்பட்டு கொலை

ADMIN
0

குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர், சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார்.

கல்ப் நியுஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

எரிகாயங்கள் உட்பட பல காயங்களுடன் அமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த பணிப்பெண்ணிற்கு தொழில்வாய்ப்பை வழங்கியவர்களே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் அவர்களை விசாரiணை செய்துவருகின்றோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இலங்கை பணிப்பெண் உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முழுமையான அறிக்கையை பெறுவதற்காகவும் என்ன நடந்தது என்பதை உறுதி செய்வதற்காகவும் உயிரிழந்த பணிப்பெண்ணின் உடலை தடயவியல் பிரிவிற்கு அனுப்பியுள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top