மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நானுஓயா பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்து வந்த மகேந்திரன் யசோதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (28) இரவு, 10.30 மணிவரை குறித்த மாணவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாம் நித்திரைக்கு சென்று அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து, மாணவியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.