மாடறுப்பு க்கு தடை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விடயத்தை மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சர்கள் அமைச்சரவை கூடியது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே செப்டம்பர் 08 அன்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது மாடருப்பு தடை விதிக்க முன் மொழிந்து இருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் அந்தந்த குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என தெரிவிக்கப் படுகிறது.
Post a Comment