Headlines
Loading...
அடிப்படைவாத தாக்குதல் இனிமேலும் எமது நாட்டில், நடைபெறாமல் இருக்க முப்படையினரும் நடவடிக்கை

அடிப்படைவாத தாக்குதல் இனிமேலும் எமது நாட்டில், நடைபெறாமல் இருக்க முப்படையினரும் நடவடிக்கை


தேசிய பாதுகாப்பு குறித்து மிக கவனம் செலுத்த வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையின்பொருளாதாரத்திற்கு வரலாற்று முக்கியத்துவத்தை ஒன்று சேர்க்கின்ற பிரதேசம் திருகோணமலையாகும். இலங்கை வரலாற்றில் கடந்த 30 வருடங்களாக நிலவிய நிலைமைகளில் இருந்து இந்த திருகோணமலை பிரதேசத்தை பாதுகாப்பதற்காக முப்படையினரும் சிறப்பாக செயற்பட்டனர்.

இதேபோன்று கடந்த வருடம் இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதலைப் போல ஒரு தாக்குதல் இனிமேலும் எமது நாட்டில் நடைபெறாமல் இருப்பதற்கும் எமது இராணுவமும், முப்படையினரும் பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று இராணுவத்தினர் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று கோவிட் - 19 தனிமைப்படுத்தல் விடயத்திலும் பாரிய சேவைகளை செய்து வந்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Comments: