Top News

வரலாற்றில் முதல் தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் புதிய மாற்றம்.


- சகா -

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்க்காக அனுமதிஅட்டை (Admission Card) முதன்முறையாக பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படவிருக்கிறது.

இவ்வனுமதி அட்டையில் பரீட்சை எண் மற்றும் விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய பரீட்சை நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் அப்படியான அனுமதிஅட்டை க.பொ.த. சா.தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு மாத்திரமே பாடசாலை மாணவர்க்கு வழங்கப்பட்டுவந்தது.தரம் 5புலமைப்பரிசில் மாணவர்க்கு இதுவரை அனுமதிஅட்டை முறைமை அமுலில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை பரீட்சைக்கு முகங்கொடுக்கும் போது கொண்டு வருவது கட்டாயம் அல்ல. ஒரு விண்ணப்பதாரி பரீட்சை அனுமதி அட்டையை காண்பிக்காதவிடத்து பாடசாலை மூலம் வழங்கப்படும் வருகை ஆவணத்தை கொண்டு பரீட்சகரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்படும்.

மேற்படி பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பகுதி 1 மு.ப. 09.30 – 10.30 மணிவரையும் பகுதி 2 11.00 – 12.15மணி வரையும் இடம்பெறும்.

இப்பபரீட்சைக்குத் தோற்றும் அனைத்து விண்ணப்பதாரிகளினதும் பரீட்சை அனுமதி அட்டை மற்றும் வரவு ஆவணம் என்பன உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி அட்டவணை மற்றும் வரவு ஆவணம் கிடைக்காத பாடசாலை அதிபர்கள் பரீட்சைத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post