Headlines
Loading...
தயாசிறி பொய் சொல்கிறார், பாழடைந்த கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது - சந்திரிக்கா ஆவேசம்

தயாசிறி பொய் சொல்கிறார், பாழடைந்த கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது - சந்திரிக்கா ஆவேசம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி அக் கட்சி உறுப்பினர்களி டமும், ஊடகங்களிடமும் தெரிவித்திருப்பது ஒரு அப்பட்டமான பொய். கடந்த மூன்று ஆண்டுகளாகக் கட்சியின் நிறைவு ஆண்டு மாநாடுகளுக்கு எந்தவொரு உத்தியோக பூர்வ அழைப்பும் தன க்கு விடுக்கவில்லை என நான் உங்களுக்கு உறுதியளிக் கிறேன் என முன் னாள் ஜனா திபதி சந்தி ரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள் ளார்.



அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க தனது சமூக ஊடக கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69 ஆவது ஆண்டுவிழா அண்மையில் இடம் பெற்றது. குறித்த வைபவத்தில் கலந்துக்கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்ததாகக் கட்சியின் பொதுச் செய லாளர் தயா சிறி அக்கட்சி உறுப்பினர் களிடமும், ஊடகங்களிடமும் தெரிவித்திருப்பது இது ஒரு அப் பட்டமான பொய்.

கடந்த மூன்று ஆண்டு நிறைவு கட்சி மாநாடுகளுக்கு எந்தவொரு உத்தி யோகபூர்வ அழைப்பும் தனக்கு விடுக்கவில்லை என நான் உங்களுக்கு உறுதியளிக் கிறேன் என முன்னாள் ஜனா திபதி சந்தி ரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

கட்சி உறுப்பினர்களை மேலும் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் அவர்கள் உருவாக்கிய பொய்களை புத்திசாலித்தனமாக விசாரிப்பது உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் கட மை.

பல ஆண்டுகளாக மாநாடுகளுக்கு மட்டு மல்ல, மத்தி யக் குழுக் கூட்டங் களுக்கும் எனக்கு எந்த ஒரு அழைப்பும் விடுக்கவில்லை.

அப்படி அழைப்பு கிடைத்திருந்தால், எனது அன்புக்குரிய தந்தை உருவாக்கிய, தாய் பாதுகாத்த, நான் பிறந்து வளர்ந்த, நான் நாட்டுக்குச் சேவையாற்ற வழியை ஏற்படுத்திக்கொடுத்த கட்சிக்காக நான் அதில் கலந்துக்கொள்ளாமல் இருந்திருப்பேன் என நினைக்கின்றீர்களா?. அப்படியான அழைப்புகள் கிடைத்திருந்தால், அவற்றை ஏகமானதாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.

கட்சி ஏற்பாடு செய்யும் எந்த ஒரு கூட்டங்களுக் கோ, வைபவங்களுக் கோ என்னை அழை க்க வேண்டாம் என கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தலைமை அலு வலக ஊழியர்களுக்குக் கூட உத்தரவிட்டுள்ளனர்.



அதையெல்லாம் பரிதாபத்துடனும் அவமதிப்புடனும் நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அத்துடன் கட்சி பாழடைந்த நிலையில் இருந்து எங்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

0 Comments: