Headlines
Loading...
ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் இம்ரான் கானின் அனல் பறக்கும் உரை.

ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் இம்ரான் கானின் அனல் பறக்கும் உரை.


இணையத்தினூடாக நடைபெற்ற ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது.

இறை தூதர் முகம்மது நபி அவர்கள் மதீனாவை எந்த தத்துவம்,கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தேசமாக கட்டமைத்தார்களோ அவற்றை முன்னுதாரமாக கொண்ட பாகிஸ்தானாக மாற்றியமைப்பதே தமது இலக்கு என்று தெட்டத்தெளிவாக உரையின் ஆரம்பத்திலேயே பிரகடனம் செய்தவராக உரையை தொடர்ந்தார்.

இதுவரை தொடர் பொறுமையை மேற்கொண்டுவரும் பாகிஸ்தானின் இருப்புக்கு எதிரான அனைத்து சவால்களும் உரிய வகையில் எதிர்கொள்ளப்படும் என்ற செய்தியை அழுத்தமாக உரத்து சொன்னார்.

பாகிஸ்தானின் இருப்பு,சுதந்திரம் என்ன விலைகள் கொடுத்தாயினும் பாதுகாக்கப்படும் என திட்டவட்டமாக கூறினார்.

கஷ்மீரில் மேற்கொள்ளப்படும் RSS அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட்டு கஷ்மீரின் சுயநிர்னயம் அங்கீகரிக்கப்படவேண்டும்.

பாலஸ்தீனம் அதன் பழைய எல்லைகளுடன் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக எமது உயிரிலும் மேலான அல்குர் ஆனையும் நபி அவர்களையும் அகௌரவப்படுத்தும் இஸ்லாமாபோபியா எனும் சர்வதேச இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் முயற்சியை ஐ.நா சபை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினார்.

தொடேர்ச்சையாக மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டால் அழிவை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கான கதவுகள் திறந்துவிடும்.

அனைவரின் பாதுகாப்பும் உத்தரவாதப்ப்படுத்தப்பட்டாலன்றி

யாரும் பாதுகாப்புடன் வாழ முடியாமல் போய்விடும் என்ற காத்திரமான செய்தியை சர்வதேசத்தின் காதுகளுக்கு அழுத்தமாக எத்திவைத்தார்.

-மேற் சொல்லப்பட்டவை இம்ரான் கானின் உரையின் சாராம்சமேயன்றி சொல்லுக்கு சொல்லான மொழி பெயர்ப்பல்ல-

ஆங்கிலத்தில் ஆற்றப்பட்ட முழு உரையையும் கேட்க விரும்புவோர்

நேற்று பகிரப்பட்ட வீடியோவில் கேட்டுக்கொள்ளலாம்.

-வஃபா பாறுக்-

0 Comments: