பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன் கிழமை நாட்களில் தமது அமைச்சுக்களில் கட்டாயம்
அமைச்சர்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் சந்திப்பு தினங்களில் அரச அதிகாரிகள் மக்கள் சந்திப்பு இடம்பெறும் புதன் கிழமை நாட்களில் அமைச்சுக்களில் இருப்பதில்லை என அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
அத்துடன் மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment