Top News

இலங்கை தொழிலாளர்களுக்கு சவூதி அரேபியா வழங்கும் நிவாரணம்.


இலங்கை தொழிலாளர்களுக்கு நாடு திரும்புவதற்கான நிவாரணம் வழங்க சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக அந்நாட்டு விசா காலாவதியாகிய அல்லது விசா செல்லுபடியாகும் நிலையில் நாட்டைவிட்டு வெளியேற முடியாத அனைத்து இலங்கை தொழிலாளர்கள் மீது , எந்தவொரு கட்டணமும் அபராதமும் வசூலிக்கப்படாமல் அந்த நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

சவூதி அரசாங்கத்தின் இந்த முடிவு தற்போது நாட்டிற்கு வரும் நிலையில் இருக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.

இது இலங்கை எதிர்கொள்ளும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நட்பு ரீதியாக சவூதி அரசு மேற்கொள்ளும் தற்காலிக நடவடிக்கையாகும்.

இந்த முடிவு இரு நாடுகளுக்கு இடையில் உள்ள வலுவான இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்பெற செய்யும்.

கொரோனா தொற்று காலத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இவ்வாரான நலன்புரி நடவடிக்கைகள் மூலம்  உதவிகளை வழங்கியதற்காக சவூதி அரசுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.

Post a Comment

Previous Post Next Post