முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமடகொட சமிந்தவின் சாரதி நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய கிரிபத்கொடை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
´கொன்ட ரிஸ்வான்´ என்ற மொஹமட் பாருக் மொஹமட் ரிஷ்வான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் மாகொல மயான வீதியில் அமைந்துள்ள அவரின் வீடு பொலிஸாரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அங்கிருந்த 05 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 05 கைப்பேசிகள், மூன்று வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி அட்டைகள் 03 ம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு புளுமென்டல் பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்ட ´ஆம் சம்பத்´ என்ற நபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment