அமைச்சுக்களின் பெயர்கள் மற்றும் விடயதானங்களில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் விடயதானங்களில் சிலவற்றை இராஜாங்க அமைச்சர்களுக்கு பகிரவுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை இராஜாங்க அமைச்சுக்களின் பெயர்களிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த மாற்றங்கள் அடுத்த வாரமளவில் இடம்பெறலாமென ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment