Top News

அம்பேப்பிட்டிய தேரரின் அராஜகமும் நாளுக்கு நாள் அதிகரிப்பு.?


(பாறுக் ஷிஹான்)

இனத்துக்காக தன்னுயிரை நீத்த திலீபனை நினைவு கூற நடவடிக்கைகளை மக்கள் ஒற்றுமையுடன் முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (29 ) 2.30 மணி முதல் 6 .30 மணிவரை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது மக்கள் இனத்திற்காக விடுதலைக்கு உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டடி திலீபன் அண்ணாவிற்கு ஒரு நினைவேந்தலை மேற்கொள்ள மக்கள் தீர்மானித்த நிலையில் சில தீய சக்திகள் எம் இனத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து அதை தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.இதனை அவர்கள் தொடர்ந்து செய்வார்களாயின் மக்கள் சிறந்த பாடங்களை அவர்களுக்கு படிப்பிப்பார்கள்.இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அம்பேப்பிட்டிய தேரரின் அராஜகமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக இருப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.சிறுபான்மையாகிய நாங்கள் சில அற்ப ஆசைக்காக எமது உரிமைகளை சில சந்தர்ப்பங்களில் பறி கொடுத்துள்ளோம் என குறிப்பிட்டார்.

Post a Comment

Previous Post Next Post