Top News

என்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் எனது தாய், தந்தை போன்றவர் - மகிழ்ச்சியில் சுமணரதன தேரர்


தன்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் தனது தாய், தந்தை போன்றவர் எனவும் நாட்டு மக்கள் அவருக்கு கௌரவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் இன்று -30- பிணைய வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தியமை, அச்சுறுத்துவது மக்கள் மத்தியில் சூழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக எதிர்த்தரப்பினர் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

எனினும் எதிர்த்தரப்பினரால் பல வருடங்களாக எமக்கு இல்லாமல் செய்யப்படும் விடயங்கள், நாங்கள் கோஷம் போடுவது மற்றும் சண்டையிட்டு கொள்வதற்கான பதிலை அரச அதிகாரிகள் வழங்கியுள்ளனரா, கிடைத்துள்ளதா?, எதிர்காலத்தில் கிடைக்குமா? மீண்டும் நாங்கள் சண்டையிட்டு கொள்ளாதபடி அரச அதிகாரிகள் செயற்படுவார்களா? ஆகிய எந்த விடயங்களும் இங்கு பேசப்படவில்லை.

நடந்த தவறுக்கு நீதிமன்றம் எனக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியது, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றது, நீதிமன்றத்தை நான் மதிக்கின்றேன், நீதிமன்றம் எப்போதும் கிழக்கு மாகாணத்தில் எனக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து மிக நன்றாக ஆராய்ந்தது.

பொலிஸார் முன்வைக்கும் விடயங்களின் அடிப்படையில் நீதிமன்றம் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படும், எவ்வாறாயினும் எனக்கு பிணை கிடைத்தது, என்னுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

நான் எப்போதும் மதிக்கும், எனக்கு பிரச்சினைகள் வரும் போது, முஸ்லிம் இனத்தவர் என்ற வகையில் இல்லாமல், சிங்கள இனத்தவருக்கும் அப்பால் சென்றவராக, எனது தாய், தந்தை போல் இருந்து என்னை காப்பாற்றிய அமீன் ஐயா அவர்களுக்கு நான் ஆசிர்வதிப்பேன், புண்ணியம் செய்வேன், நன்றிகூறுகிறேன்.

என்னை காப்பாற்றியதற்காக இவருக்கு இந்த கௌரவத்தை வழங்குமாறு நான் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை எதிர்காலத்தில் பார்ப்போம் என அம்பிட்டியே சுமணரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post