(செ.தேன்மொழி)
கண்டி - உடுதும்பர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புலி இறைச்சியை விற்பனை செய்ததாக தம்பதியினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலல்கமுவ பகுதியில் இன்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக உடுதும்பர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பன்றிகளை வேட்டையிடும் நோக்கத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி உயிரிழந்திருந்த புலியை இவ்வாறு இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர்.
உடுதும்பர பகுதியைச் சேர்ந்த 32 - 34 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 14 கிலோ கிராம் புலி இறைச்சியும் , புலியின் தலை உள்ளிட்ட ஏனைய உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment