முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அவரது செயலாளர் மற்றும் கொழும்பு ஆயர்கள் மூவருக்கும் ஊடக அறிக்கைகள் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு.
ஹேமசிறியின் கூற்றையெதிர்த்து மைத்ரிபாலவும், ஹரினின் கூற்றுக்கு எதிராக ஆயர்களும் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வரும் பின்னணியிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதை தவிர்க்குமாறு குறித்த நபர்களை நேரில் அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment