Top News

சஜித் மீது கல்வீசி தாக்குதல் கூட்டத்தில் சலசலப்பு.


எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம் தெரியாத

நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்மலானையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,

“நான் எந்தவொரு சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள தயார். யாருக்கும் பயப்படபோவதில்லை. கல்வீசி தாக்குதல் மேற்கொண்டாலும் நான் இந்த இடத்தினை விட்டு செல்லப்போவதில்லை.” எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post