விவசாய அமைச்சு பொது மக்களுக்கு நிவாரண விலையில் மரக்கறிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய 700 ரூபாய் பெறுமதியான மரக்கறி பொதியினை 350 ரூபாய்க்கு வழங்க அந்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கெரட், உருளைகிழங்கு, பீட்ரூட், தக்காளி, லீக்ஸ் மற்றும் நோக்கல் ஆகிய மரக்கறிகள் அடங்கிய பொதிகளையே அமைச்சு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை பிரகடனத்திற்கு இணங்க விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிவாரண பொதி வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
விவசாய அபிவிருத்தி மத்தியநிலையத்தினால் விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment