நுவரெலியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 56 வயதுடைய ஒருவர் நேற்று(06) மாலை நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த 01 ஆம் திகதி டுபாய் நாட்டில் இருந்து இலங்கையை வந்தடைந்த குறித்த நபரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி நுவரெலியாவில் அமைந்துள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் டுபாய் நாட்டில் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றிய பொழுது இவருக்கு ஒருவகை வைரஸ் உடம்பில் பாதிக்கப்பட்டிருந்ததுடன் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து நுவரெலியாவில் விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு சுகவீனம் ஏற்படவே இவரை கடந்த 02 ஆம் திகதி நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை எனவும் இவருடைய உயிரிழப்பிற்கு காரணம் உடலில் வைரஸ் பரவல் மற்றும் நீரிழிவு நோயின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இன்று(07) காலை நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment