மருதமுனை இளைஞனுக்கு இளம் சாதனையாளர் விருது

ADMIN
0

நூருல் ஹுதா உமர் 

அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்த கமால்தீன் முஹம்மட் மிப்ராஸ் என்ற இளைஞருக்கு இளம் சாதனையாளருக்கான விருது இலங்கை சாதனையாளர் மன்றத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 19ம் திகதி கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிலேயே இவ்விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இவ்விமாவில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீடத்தின் மூன்றாம் வருட மாணவருமான இவர் "Graphics Hub" நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கிழக்கிலங்கையின் சிறந்த புகைப்படக்கலைஞரும் ஆவார்.




Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top