ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான விசாரணைகளின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவருக்கு அதில் தொடர்பிருப்பது உறுதியானால் கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.
அரச புலனாய்வுத் திணைக்களம் தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களை அலட்சியம் செய்துள்ளதாக பெருவாரியான சாட்சியங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால குறித்த நேரத்தில் வெளிநாடு சென்றிருந்தமை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மைத்ரிக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டால் எதுவித சலுகைகளுமின்றி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் பிரசன்ன.
Post a Comment