Top News

தபால் தாமதமாக கிடைத்ததால் முஸ்லிம் மாணவிக்கு கிடைத்த அதிர்ச்சி.


நகர வதிவிட அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் 2020 உலக குடியிருப்பு ஞாபகார்த்த தின நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த சிறுவர் சித்திரப்போட்டியில் தியாவட்டவான் அறபா வித்தியாலய மாணவி ஆர்.எப்.எப்.நுஸ்லா பங்கு பற்றி தேசிய ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன் இறுதிப்போட்டி இடம்பெறும் தினம் தொடர்பில் முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்படாத நிலையில், குறித்த இறுதிப்போட்டி இன்று (26) திகதி சனிக்கிழமை மு.ப 08.00 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும் அழைப்புக் கடிதத்துடன் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறும் குறிப்பிட்டு 18.09.2020ம் திகதி இடப்பட்ட கடிதம் நேற்றைய தினமே பாடசாலை மூடப்பட்ட பின்னர் கிடைக்கப்பெற்றதுடன், அதிபரின் கைக்கு நிகழ்ச்சி நடைபெறும் தினமான சனிக்கிழமை காலையிலேயே கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக குறித்த போட்டியில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பினை குறித்த மாணவி இழந்துள்ளதுடன், தன்னால் பங்கு பெறாத முடியாமல் போனதையிட்டு ஆழ்ந்த கவலையும் கொண்டுள்ளார்.

எனவே, இவ்வாறான தாமதங்கள், நிர்வாகச் சீர்கேடுகளும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதுடன், கேள்விக்குட்படுத்தும் என்பதை கவனத்திற் கொண்டு இவ்வாறான கடிதங்களை ஆகக்குறைந்து ஒரு வார காலத்துக்கு முன்பாக கிடைக்கக்கூடிய வகையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

அப்போது தான் தூர இடங்களிலிருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

குறித்த விடயங்களில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் அதிகாரிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post