Top News

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராஜசிங்கம் இராஜினாமா


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தமது பதவியை இராஜினாமா செய்வதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் பிரதியிட்டு, கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

தமது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியைத் தொடர்ந்தும் வகிக்க முடியாதுள்ளதாக இராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவித்துறப்பை ஏற்றுக்கொண்டு ஏனைய விடயங்களை உரியவாறு கையாளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக கி.துரைராஜசிங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post