Top News

BREAKING: ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பிரதித்தலைவர் நியமனம்!!!


ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவண் விஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (14) கூடியிருந்த நிலையில் கட்சியின் பிரதி தலைவர் பதவிக்காக ருவண் விஜயவர்தன மற்றும் ரவிகருணாநாயக்க ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருவரில் ஒருவரை பிரதி தலைவராக தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய ருவண் விஜயவர்தன ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post