Top News

ISIS தலிபான் போன்று ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த அதாவுல்லாஹ் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா பாராளுமன்ற சபா மண்டபத்திலிருந்து சபாநாகரினால் சிறிது நேரத்திற்கு வெளியேற்றப்பட்டார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அதாவுல்லா அணிந்திருந்த உடை, எந்த வகையிலும் பாராளுமன்ற கலாசாரத்திற்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் ISIS தலிபான் போன்று ஆடை அணிந்து வந்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, சட்டப் பிரச்சினை ஒன்றை முன்வைத்து சுட்டிக்காட்டினார்.

இதனைக் கவனத்திற்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உடனடியாக பொருத்தமற்ற உடையை மாற்றிவிட்டு சபைக்குள் வரும்படி அதாவுல்லாவுக்கு பணித்தார்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா, சபையிலிருந்து வெளியேறி பாராளுமன்ற கலாசாரத்திற்குப் பாதிப்பு அல்லாத ஆடையை அணிந்து மீண்டும் சபைக்குள் பிரவேசித்தார்.

Post a Comment

Previous Post Next Post