Top News

O/L படிக்கும் மாணவனை போதை மாத்திரைக்கு அடிமையாக்க முயற்சி ஒன்றுதிரண்ட சிலாவத்துறை மக்கள்.


19.09.2020 அன்று இரவு 9.00 மணியளவில் சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட போதைப் பொருள் வியாபரத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் போதை மாத்திரையை சிலாவத்துறை பாடசாலையில் க.பொ.த. சா.த படிக்கும் மாணவர் ஒருவருக்கு பலாத்காரமாக உண்ண வைக்க முயற்சித்த வேளை குறித்த மாணவன் சமயோசிதமாக அந்த போதை மாத்திரை வியாபாரியிடமிருந்து தப்பி வந்து தனது பெற்றோருக்கு விடயத்தை தெரிவித்துள்ளார்.

 அதன் பின்னர் குறித்த மாணவனின் பெற்றோர்கள் இன்று பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் கிராமத்தின் நலன் விரும்பிகளை சந்தித்து சம்பவத்தை எடுத்துக்கூறிய போது இந்த செயலைக் கண்டித்து கிரமமே ஒன்றுபட்டு இந்த சம்பவம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று 20.09.2020 ஞாயிறு பகல் 12.00 மணியளவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.

 அந்த முறைப்பட்டின் அடிப்படையில் குறித்த போதை மாத்திரை வியாபாரியான இளைஞன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். 

ஆனால் குறித்த போதை மாத்திரை வியாபாரி செல்வாக்கான குடும்பப் பின்னணியைக் கொண்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் தப்ப வைக்கப்படுவாரோ என்ற பலத்த சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. 

அண்மைக்காலமாக சிலாத்துறைப் பகுதியில் முறையற்ற போதைப் பொருள் பாவனை இளைஞர்கள் மத்தியில் அதிகரிப்பதற்கு இந்த போதை வியாபாரியான குறித்த இளைஞனே காரணம் என்றும் கிராம மக்கள் தெரிவுத்தனர்.

Post a Comment

Previous Post Next Post