இலங்கையில் Paypal எனும் பண பரிமாற்று சேவையை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Pay pal வசதியை இலங்கைக்கு பெற முயற்சிக்காமைக்கு இரண்டு காரணங்கள் இதற்கு முன்னர் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கவாரத்திற்கு பணம் சேகரித்தல் மற்றும் இதன் ஊடாக பண தூய்மையாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனால் இலங்கைக்கு இந்த வசதி பெற்றுக் கொள்ளப்படவில்லை.
எனினும் தற்போது இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், போதை பொருள் ஒழிப்பதாகவும், பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதியளித்துள்ளார்.
போதைப் பொருள் வியாபாரம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு Paypal வசதி பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வசதியை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கு தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment