( அன்சார்.எம்.ஷியாம்)
அரச அதிகாரிகள் மற்றும் பிற சமூகங்களில் இருந்து வக்ஃப் சபைக்குக் கிடைக்கப் பெற்று வரும் பல்வேறு முறைப்பாடுகள்,அறிவித்தல்களைக் கருத்தில் கொண்டு, பள்ளிவாசல்களைப் புதிதாக நிர்மாணம் செய்வது, கட்டடங்களை எழுப்புவது மற்றும் புதிதாகப் பள்ளிவாசல்களைப் பதிவு செய்வது தொடர்பில், அக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து உடனடியாய் அமுலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட ஒழுக்க விதிகளை செயல் படுத்த இலங்கை வக்ஃப் சபையானது தீர்மானித்துள்ளது.
இதற்கமைய -
1.பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணம் செய்யவோ/கட்டியெழுப்பவோ/புதிதாய்ப் பதிவுகளை மேற்கொள்ளவோ குறித்த இடத்தில் குறித்த வகையில் பள்ளிவாசல் ஒன்றின் அவசியத் தேவை குறித்து வக்ஃப் சபை திருப்தியுறும் வகையில் சான்றுகனை முன்வைத்தல்.
2.பள்ளிவாசல் ஒன்றின் தேவையை உறுதிப் படுத்துமிடத்து- பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப் பட வேண்டியது முக்கியமாகும்:
a. குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் சனத் தொகை.
b. குறித்த பிரதேசத்தில் ஏலவே காணப் படும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை
C. நிர்மாணம் செய்யவோ/பதிவு செய்யவோ/ உத்தேசித்துள்ள பள்ளிவாசலுக்கும் ஏற்கனவே அதற்கு மிக அண்மையில் காணப்படும் பள்ளிவாசலுக்கும் இடைப் பட்ட தூரம்.
d. உத்தேசிக்கப் பட்டிருக்கும் பள்ளிவாசலிருந்து பிற இன, மத,சமூகத்தவரின் மதத் தளங்களுக்கும் இடைப் பட்ட தூரம்.
3. குறித்த நிர்மாணங்களை மேற்கொள்ளவும் பராமரிக்கவும் தேவையான நிதிவளம் வக்ஃப் சபை முன்பு உறுதிப் படுத்தப் படல் வேண்டும்.
4. குறித்த பள்ளிவாசலின் அவசியமும் நிதிவளமும் வக்ஃப் சபையால் உறுதிப் படுத்தப்பட்டு, அனுமதி வழங்கப் பட்ட பின்னர்- குறித்த கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்தாலும் குறித்த நிர்மாணங்களோடு தொடர்புடைய உள்ளூராட்சி அதிகார சபையாலும் மற்றும் அரசாங்க மற்றும் அதனோடு தொடர்பு பட்ட பிற ஸ்தாபனங்களிலும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைவாக அனுமதி பெறப் பட்டு, அவை நிர்மாணப் பணிகள் தொடக்கப் படுவதற்கு முன்னர் வக்ஃப் சபைக்கு சமர்ப்பிக்கப் பட வேண்டும்
Post a Comment