உணவளிப்பவன் இறைவன் என்பதை உறுதியாக நம்பிய மனிதன் பொறாமைப்படவோ நம்பிக்கையிழக்கவோமாட்டான் என்பதற்கு சவூதியில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் நல்ல உதாரணமாகும்.
பிரபல்யமான ஒரு உணவகத்தின் அருகில் யாரென்றே தெரியாத புதியவர் ஒருவர் புதிய உணவகம் ஒன்றை திறக்க ஏற்பாடு செய்தார்.
பிரபல்யமான உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு கடமை புரியும் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து புதிய உணவகம் திறக்கப்படும் நாளில் தனது உணவகத்தை ஒரு நாள் முழுவதும் மூடி புதிய உணவகத்திற்கு தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி தனது உணவகத்தில் "இன்று உணவகம் மூடப்பட்டிருக்கும்" என்ற அறிவித்தலை பதாதையையும் இட்டிருக்கிறாரகள்.
இஸ்லாம் கூறும் பறக்கத்தான வியாபார ஒழுங்கு இதுதான்.
(கண்டிப்பாக இதை Share செய்து நமது வியாபாரங்களிலும் இவ்வாறான முன்மாதிரியான விடயங்களை கடைப்பிடிக்க இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம்!)
(முஹம்மத் பாயிஸ், சவூதி அரேபியா)