Top News

புர்காவைக் கொண்டு இந்தியரின் உயிரைக் காப்பற்றிய அரபு பெண்மணி.!


துபாயில் ஒரு அரபுப்பெண்மணி தன்னுடைய புர்காவை கழட்டி இந்திய லாரி ஓட்டுனரின் மீது பற்றிய நெருப்பை அணைத்ததோடு மட்டுமில்லாமல், அவரின் கண்ணியத்தையும் காப்பாற்றியுள்ளார்.

துபாயில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதால் தீப்பற்றிக்கொண்டன.

லாரியை ஓட்டிய சிங் என்ற இந்தியர் மீதும் தீ பிடித்து அவரது ஆடை தீயில் எரிந்தது.

அந்த வழியாக காரில் சென்ற அரபுப் பெண் தன் புர்காவின் மூலம் ஓட்டுனரின் மீது பற்றிய நெருப்பை அனைத்து விட்டு, அதையே அவர் அணிந்துகொள்ள கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

காயங்களுடன் மருத்துவமனையில் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

மிகவும் தைரியமாக செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றியதற்காக துபாய் காவல்துறை அந்தப் பெண்மணியை தேடுகின்றது.

இஸ்லாமிய பெண்களுக்கு புர்கா மிகவும் முக்கியமான ஒரு அம்சம் ஆனாலும் ஒரு உயிர் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக அதை கூட துச்சமென மதித்து செயல்பட்ட அந்த சகோதரிக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே!

வாழ்த்த நினைத்தால் ஷேர் செய்து வாழ்த்துங்கள்...

Post a Comment

Previous Post Next Post