இலங்கையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலப்பகுதியில், மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி, கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்ததுபோல், இம்முறையும் பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று -04- கொரோனா தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணயில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக அதிகம் முக்கியதுவம் வழங்கியமைக் காரணமாக, இலங்கை ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக கொரோனா ஒழிப்பு விடயத்தில் விளங்கியதுடன், நாம் விரைவிலேயே கொரோனா தொற்றிலிருந்து மீண்டோம் என்றார்.
எனவே கட்டாயமாக அனைவரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
இன்று தொற்றாளராக ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ளதால், ஏனையோருக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே அதிக சனநெருக்கடி மிக்க பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.