TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசிகளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, SIM அட்டையுடன் பயன்படுத்தப்படும் எந்தவொரு தொலைபேசி சாதனத்தையும், TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்திருத்தல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனிப்பட்ட நபர்களினால் பல்வேறு வழிகளிலும் நாட்டுக்குக் கொண்டுவரப்படும் இவ்வாறான உபகரணங்களை, TRCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்படாத SIM அட்டையுடன் பயன்படுத்தப்படும் தொலைபேசி சாதனங்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றை சேவை வழங்குநரின் ஊடாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், ஏதேனும் ஒரு சேவை நிறுவனத்தின் SIM அட்டையுடன் தற்போது பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தொலைபேசி சாதனங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிதாகக் கொள்வனவு செய்யும் தொலைபேசி சாதனத்தின் EMI இலக்கத்தை 1909 எனும் இலக்கத்துக்கு SMS அனுப்புவதன் மூலம், வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளமுடியும்.
இந்த நிலையில், சட்டவிரோதமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சாதனங்களினால் பல்வேறு பாதிப்புகள் குறித்து அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், RCSL எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment