Top News

குவைத்தில் புதிய மன்னர் பதவியேற்பு.


அமீர் ஷேக் சபாவின் ஒன்றுவிட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஸ் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா (Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah) குவைத்தின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் (29) காலமானார். அவருக்கு வயது 91.

அமைதியையும், சமாதானத்தையும் தனது கொள்கையாகக் கொண்டு ஆட்சி நடத்தியவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத்.

இந்த நிலையில், குவைத்தின் புதிய மன்னராக அமீர் ஷேக் சபாவின் ஒன்றுவிட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஸ் பொறுப்பேற்றுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் அவர் குவைத்தின் புதிய மன்னராகப் பொறுப்பேற்றார்.

1991 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் குவைத் மீது படையெடுத்த காலகட்டத்தில் ஷேக் நவாஸ் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். போருக்கு பின்னர் அவர் சமூக நலத்துறை அமைச்சராகவும் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

அதன் பின்னர் குவைத் தேசிய இராணுவத்தின் துணை தலைவராக பொறுப்பேற்ற ஷேக் நவாஸ் மீண்டும் உள்துறை அமைச்சரானார். அதன் பின்னர் கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரியில் அவர் குவைத்தின் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post