கொரோனா தொடர்பாக இராணுவத்தளபதி வெளியிட்ட முக்கிய தகவல்.

ADMIN
0

நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளமையால், இது மீண்டும் இங்கு வராது என்று அர்த்தம்

கிடையாது என இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சவேந்திரசில்வா மேலும் கூறியுள்ளதாவது, “உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், நாம் மிகவும் வெற்றிகரமாக கொரோனா தொற்றை இலங்கையில் கட்டுப்படுத்தியுள்ளோம். எனினும், மீண்டும் இங்கு வராது என்று அர்த்தம்கிடையாது.

நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தொடர்ச்சியாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். இது அத்தியாவசியமாகவே கருதப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top