கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மகிந்த தன்னை தொடர்பு கொண்டு பேசுவார் என நினைத்த போதிலும் அது இதுவரை நடக்கவில்லை என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் காணொளி முகப்புத்தகத்தில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் முன்னெடுத்த நடவடிக்கையின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
என்னோடும் அவர்கள் பேசினார்கள். இது குறித்து நீதி கிடைக்குமா என்பது குறித்து நாம் பார்த்து கொண்டுள்ளோம். நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
எனக்கு இது குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை. இந்த நாட்டின் பௌத்த கலாச்சார அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ச காணப்படுகிறார்.
எனவே நான் நினைத்தேன் இந்த விடயம் தொடர்பாக அவர் அல்லது விடயம் தொடர்பான அதிகாரி ஒருவர் என்னோடு பேசுவார் என. அது இதுவரை நடக்கவில்லை.
நான் நம்பினேன் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவராவது இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து எனக்கு சார்பாக நீதிமன்றில் பேசுவார்கள் என்று, அதுவும் நடக்கவில்லை.
ஜனாதிபதி கூட அரச மற்றும் தனியார் மக்களிடையே காணப்படும் பிரச்சினை குறித்து ஆராய்ந்து வருகிறார். இருந்தாலும் இந்த விடயம் குறித்து அவர் கூட கவனம் செலுத்தவில்லை.
நாட்டு மக்களே இந்த விடயம் தொடர்பாக போராடிவரும் போது ஜனாதிபதி இதனை கவனத்தில் எடுத்து கொள்ளாமை கவலைக்கிடமாக உள்ளது.
அன்று தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வந்து பொலிஸார் என கூறி விவசாயிகளை துரத்தி விட்டார்கள்.
அது குறித்து நான் தேடிப்பார்த்து கதைக்க போய் அவர்களை நான் தாக்கியதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
நான் செய்ததை பிழை என கூறி என்னை தண்டித்தால் நான் அதனையும் பொறுமையுடன் பார்த்து கொண்டிருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment