ரிஷாத் பதியுதீனுடன் எங்கள் அரசாங்கம் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை ஜனாதிபதி அதிரடி

ADMIN
0

நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது எனது அரசாங்கத்தின் முதல் மற்றும் முக்கிய பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் நடந்ததைப் போல, மக்களை கைது செய்யும் அல்லது விடுவிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க நான் தயாராக இல்லை.

அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் விடும் குறைபாடுகள் அல்லது தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் எங்கள் அரசாங்கம் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்.




என்மீது நம் நாட்டு மக்கள் இதுவரை வைத்திருந்த நம்பிக்கையை வீணாகாமல் என்றும், அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top