அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதவான் வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வருமானம் மற்றும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தவறியமை தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Post a Comment