இலங்கை தமிழரசுக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ப.சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கி. துரைராஜசிங்கம் பொதுச்செயலாளர் பதிவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து வழங்கிய இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ப.சத்தியலிங்கம் வட மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சராகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment