-ரிம்சி ஜலீல்-
கல்கமுவ தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அங்கமுகமுவ கிராமத்தில் TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் நிதி உதவியில் குழாய் கிணறு மற்றும் நீர்தாங்கி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக நேற்று (03) திறந்து வைக்கப்பட்டது.
அல்அக்ஸா ஜூம்ஆ பள்ளி தலைவர் அன்வர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் ஸ்தாபக பணிப்பாளர் இப்திகார் சாதிக் வைபவ ரீதியாக குடிநீர் குழாய் கிணற்றை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தார்.
மிக நீண்ட காலமாக அங்கமுகமுவ கிராமத்தில் இருந்த குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் அங்கமுகமுவ அல்அக்ஸா ஜூம்ஆ பள்ளி மற்றும் அங்கமுகமுவ முஸ்லிம் கனிஷ்ட வித்தியாளயம் ஆகிய நிருவாகங்களின் வேண்டுகோளுக்கினங்க TOI (Teaching Of Islam) ஒன்றியத்தின் நிதி உதவியில் குறித்த குடிநீர் குழாய் கிணறு அமைக்கப்பட்டது.
கல்கமுவ தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட அங்கமுகமுவ கிராமத்தில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இத்திட்டத்தினூடாக 150 குடும்பங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையு வெகுவிரைவில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் விமானப்படை அதிகாரி அஸாம், சிலோன் முஸ்லிம் ஊடகப்பிரதானி ரிம்சி ஜலீல் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.