மாட்டிறைச்சி இறக்குமதியை எனது, மாமனார் கையகப்படுத்தியதாக வந்த செய்தி தொடர்பாக உண்மையை வெளியிட்டார் நாமல்.

ADMIN
0

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டத் தடை விதிக் கும் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாட்டின் மாட்டிறைச்சி இறக்குமதி வியா பாரத்தைத் தனது மாமனார் கையகப் படுத்தியுள்ளதாக வெளியான செய்திகள் வதந்திகள் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்திலும் மாமா திலக் வீரசிங்கத்தைப் பற்றியும் இதே போன்ற தவறான செய்திகள் வெளியிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்டத் தடை விதிக் கும் தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றியுள்ள துடன், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.



குறித்த பிரேரணை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top