ஜோர்தானில் தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையர்கள்
பலருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
தங்களுடன் பணியாற்றிய நண்பர் ஒருவரே உயிரிழநதுள்ளார். உயிரிழந்த நபர் பணியாற்றும் தொழிற்சாலையில் 1200 பேர் பணியாற்றுகின்ற நிலையில் அவர்களில் 400 பேர் இலங்கையர்களாகும்.
அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையர்கள் 400 பேரில் 300 பேர் வரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அங்கு பணியாற்றும் இலங்கை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் இலங்கையர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் வெளிவிவகார பணியகத்தின் ஊடக பேச்சாளரிடம் வினவிய போது, குறித்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது தொடர்பில் இதுவரையில் உரிய முறையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என அவர் றிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினம் ஜோர்தானில் 5 தொழிற்சாலைகள் கொரோனா காணமாக சீல் வைக்கப்பட்டதாக இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.