அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்ப்பாட்டிற்கு எதிராக "அமைதியான போராட்டம்” ஒன்று இன்று (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இடம் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
அரசாங்கம் அடக்குமுறை மற்றும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதன் விளைவாக மகர சிறைச்சாலையில் பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை இன்னும் அரசாங்கம் வெளியிடவில்லை என்றும், இது குறித்து எதுவும் தெரியாத அவர்களது உறவினர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மனித உரிமைகள் மற்றும் மனித தேவைகள் மீறப்படும் சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளது என்றும், இந்த அடக்குமுறைக்கு எதிராக ஒரு எதிர்க்கட்சியாகவும், ஐக்கிய மக்கள் சக்தியாகவும் போராடுவேன் என்றும் அவர் கூறினார்.
Post a Comment