இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை நூற்றுக்கு 25 சதவீதம் உயர்த்துவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவ்வூழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் 36% சம்பளத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தபோதும் நூற்றுக்கு 25 வீத அதிகரிப்புக்கே நிர்வாக அதிகார சபையின் அனுமதி கிடைத்துள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட்19 தொற்று நிலைமையிலும் கூட சம்பள உயர்வை வழங்க முடிந்தது பெரும் வெற்றி என தலைவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் நூற்றுக்கு 25 வீத சம்பள உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாத எவருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் சுதந்திரம் உள்ளதென அவர் தெரிவித்தார்.
Post a Comment