
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 27 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
மசகு எண்ணெய் அடங்கிய கப்பலொன்று ஜனவரி 23 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார். டொலர் தட்டுப்பாடு காரணமாகவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.