Top News

இலஞ்சம் பெற்ற 36 பேர் அதிரடியாக கைது




இலஞ்சம் பெற்ற 36 பேர் இதுவரையிலான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் இதுதொடர்பில் 70 முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 33 முற்றிகைகளில் இருந்து 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆணைக்குழுவின் செயலாளர் அப்ஷரா கல்போரா தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் அடங்கலாக 5 பொலிசாரும் அடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், 2 நகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் சுகாதார பரிசோதகர்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post